28th of May 2014
சென்னை::அகடம்' என்ற எடிட்டிங் இல்லாத திரைப்படத்தை எடுத்து கின்னஸ் உலக சாதனைப் படைத்த இயக்குநர் ஜே.எம்.இசாக், தனது இரண்டாவது படத்தில், ஒரு பாடல் காட்சியில், ஒரு நிமிடத்தில் அதிகப்படியான முத்தம் கொடுப்பது மூலம், மீண்டும் உலக சாதனை படைக்க இருக்கிறார்.

அகடம் படத்திற்குப் பிறகு
ஜே.எம்.இசாக், தனது இயக்கும் இரண்டாவது படத்திற்கு 'லாரா' என்று தலைப்பு
வைத்திருக்கிறார். இதில் புதுமுகம் ஹரி, ஸ்ரீபிரியங்கா, கீதாஞ்சலி,
லஷ்மிகிரண், கணேஷ், சந்துரு, சிபி, சேத்தன், விக்னேஷ், காட்பாடி சண்முகம்
மற்றும் பலர் நடிக்கின்றனர்.
காதல், நகைச்சுவை, திரில் நிறைந்த
இப்படத்தின் கதைப்படி, வித்தியாசமான படங்கள் எடுக்கும் ஒரு இயக்குநர் கதை
எழுதுவதற்காக யாரும் இல்லாத ஒரு தனிமையான இடத்திற்கு செல்கிறார். அவர் மீது
சந்தேகப்படும் மனைவியும், அவருடன் செல்கிறார். இயக்குநர் கதை எழுத
ஆரம்பிக்கும் போது தங்கள் வந்துகொண்டே இருக்கிறது. கிளைமேக்ஸ் வரை
இயக்குநர் கதை எழுத முடியாமல் தவிக்கிறார். அந்த தடங்களுக்கான விடை தேடும்
போது ஒரு அதிர்ச்சி தகவல் அவர்களுக்கு கிடைக்கிறது. அந்த தகவலே அவருக்கு
கதையாக கிடைக்கிறது. அவருடைய மனைவியின் சந்தேகமும் தீர்கிறது.
இப்படத்தின்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜே.எம்.இசாக் இயக்குகிறார். ஈ.ஜே.நெளஷாத்
ஒளிப்பதிவு செய்ய, கே.பாஸ்கர் இசையமைக்கிறார். செந்தமிழன், கவியரசன்
ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.
Comments
Post a Comment