- Get link
- X
- Other Apps
7th of May 2014
சென்னை::சரத்குமார் நடிப்பில் ‘மகாபிரபு’, ‘ஏய்’, ‘சாணக்யா’ போன்ற ஆகிய படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ்.
தற்போது இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் கைகோர்க்கவிருக்கிறது. 'சென்னையில் ஒரு நாள்', 'புலிவால்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த ‘மேஜிக் பிரேம்ஸ்’ பட நிறுவனம், இந்தப் படத்தை தயாரிக்கிறது. இதில் சரத்குமார் இரு மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு 'சண்டமாருதம்' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். “எதிரியை எதிரியா பார்த்து பழக்கமில்லை எனக்கு, எரிச்சித்தான் பழக்கம்” என்கிற கொள்கையுடைய அழுத்தமான வில்லன் கதாபாத்திரம் ஏற்கிறார் சரத்குமார்.
புயல், சுனாமி போன்றவற்றையும் தாண்டி அசுர வேகத்துடன் வீசும் காற்றுக்கு சண்டமாருதம் என்றுபெயர். எவ்வளவு பெரிய தடைகளையும் உடைத்துவிடும் ஆற்றல் அப்பெரும் காற்றுக்கு உண்டு. அதே மாதிரி தான் சரத்குமார் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம். எவ்வளவு பெரிய தடை வந்தாலும் உடைத்தெறியும். இந்தக் கதைக்கு இப்பெயர் பொருத்தமாக இருப்பதால் ‘சண்டமாருதம்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்களாம்.
எதிரியை எதிரியா பார்த்து பழக்கமில்லை எனக்கு, எரிச்சித்தான் பழக்கம்” என்கிற கொள்கையுடைய அழுத்தமான வில்லன் கதாபாத்திரம் ஏற்கிறார் சரத்குமார். மேலும் படத்தில் முக்கியமான வேடங்களில் சமுத்திரகனி, ராதிகா சரத்குமார் நடிக்கிறார்கள். மற்றும் விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, டெல்லிகணேஷ், காதல் தண்டபாணி , ஆதவன், பாபூஸ், அவினாஷ், மாளவிகா, கானா உலகநாதன் நடிக்கிறார்கள். இவர்களுடன் கன்னடத் திரையுலகின் பிரபல நடிகர் அருண்சாகர் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு சரத்குமார் கதை எழுத, திரைக்கதை வசனம் எழுதுகிறார் ‘கிரைம்’ கதை மன்னன் ராஜேஷ் குமார். மே 14-ஆம் தேதி படப்பிடிப்பு துவங்கி, ஆகஸ்ட் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment