நடிகை மோனிகா இஸ்லாம் மதம் மாறினார் . இனிமேல் சினிமாவுக்கு முழுக்கு!!!!

31st of May 2014
சென்னை::நடிகை மோனிகா மதம் மாறினார் . இனிமேல் சினிமாவுக்கு முழுக்கு .. இந்து மதத்தில் பாதுகாப்பு இல்லையாம்!!!!!!
 
நடிகை அழகி மோனிகா இஸ்லாம் மதத்துக்கு மாறினார் , இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் என அறிவித்தார் . பத்திரிக்கை நண்பர்களிடம் இதுபற்றி அவர் பேசுகையில்
 
குழந்தை நட்ச்சத்திரமாக என் சினிமா வாழ்க்கையை தொடங்கிய நான் இதுவரை 70 படங்கள் நடித்து இருக்கிறேன் , அதற்க்கு காரணமாக நீங்கள் அனைவரும் இருந்திருக்கிறீர்கள் உங்களை விட்டு பிரிவது பெரும் கஷ்டமாக இருக்கிறது , உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது .
 
பணத்திற்காகேவா காதலுக்காவோ நான் மதம் மாறவில்லை . நான் அப்படிப்பட்ட பெண் இல்லை . இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்ததால் நான் மதம் மாறினேன் .
எனது திருமணம் பற்றிய முறையான தகவல் உரிய நேரத்தில் உ்ஙகளுக்கு தெரிவிப்பேன் .
எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக துணையாக இருந்த என் அப்பாவிற்கு இந்த நேரத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்
 
பெயர் மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனாலும் இப்போது என் பெயர் “எம் ஜி ரஹீமா” .
மாருதி ராஜ் , கிரேஸி ரஹீமா .[அம்மா அப்பா பெயருடன் புதிய பெயர் ]
இவ்வாறு மோனிகா தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்து மதத்தில் பாதுகாப்பு இல்லை அதனால் மதம் மாறியதாக சொல்லியதன் மூலம் இரண்டு  மதங்களையும் அவமானம் செய்துள்ளார். இஸ்லாமில் பாதுகாப்பு இல்லை என்று கண்டுபிடித்தால் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவாரா. எந்த மதத்தை சார்ந்தவரானாலும் அந்த மதத்தில் கடவுளை உணர முடியாதவர் அடுத்த மதத்தில் உணர முடியும் என்பது அறியாமைதான்.
 
(venket sharma, chennai)..

Comments