சுப்பர் ஸ்டாருடன் இணையும் சந்தானம்!!!

20th of May 2014
சென்னை::
கோச்சடையானைத் தொடர்ந்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா திரைப்படத்தில் முக்கிய பாத்திரமொன்றில் 
சந்தானம் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆரம்பத்திலிருந்தே இப்படத்தில் வடிவேலுவும் சந்தானமும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் அது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

இந்நிலையில் லிங்கா படத்தில் தான் நடிப்பதை டுவிட்டர் மூலம் உறுதி செய்துள்ளார் சந்தானம். லிங்காவில் நடிப்பதை பெருமையாக உணர்வதாக அவர் கூறியுள்ளார்.
 
நகைச்சுவைக்கு முக்கியத்துமிக்க இப்படத்தில் வடிவேலுவும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வடிவேலு டுவிட்டரில் ஒரு டுவீட்ட டுவீட்லாமே....

Comments