27th of May 2014
சென்னை::தமிழ் சினிமாவில் மிக நீண்ட பயணம் செய்து ஆயிரம் படங்கள் என்கிற மைல் கல்லை மிக எளிதாக தாண்டியவர் ஆச்சி என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை மனோரமா. 1958ல் ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய இவர் தனது நகைச்சுவையான நடிப்பால் அனைவரையும் மகிழ்வித்து ரசிகர்களின் இதயசிம்மாசனத்தில் இடம்பிடித்தார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களின் படங்களில் நடித்த நடிகை மனோரமா ஒருவர்தான். சொல்லப்போனால் ஐந்து முதல்வர்களுடனும் பணியாற்றிய பெருமைக்குரிய நடிகையும் இவர்மட்டும் தான். தன் உடல்நிலை சரியில்லாத நிலையில் கூட கடந்த வருடம் வெளியான ‘சிங்கம்-2’ படத்தில் நடித்திருந்தது கலைமீது இவர் கொண்டிருக்கும் அளவற்ற பற்றிற்கு எடுத்துக்காட்டாகும்.
சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனோரமா கடவுளின் ஆசியால் சற்றே உடல் நலம் தேறி மீண்டும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார். இவர் மீண்டும் படங்களில் நடிக்கவேண்டும் என்பதுதான் திரையுலகினரின் ஆசையும் கூட.. நேற்று (மே 26ம் தேதி) பிறந்தநாள் காணும் ஆச்சிக்கு நமது poonththalir-kollywood. தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறி வணங்குகிறது.....
Comments
Post a Comment