3rd of May 2014
சென்னை::அஜித்தின் அடுத்த படம் குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சமாக எகிற ஆரம்பித்து விட்டது.
டைரக்டர் கெளதம்மேனன் என்பதால் இதில் புது அஜித்தைப் பார்க்கலாம் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதுபோக முந்தைய படங்களைப் போல் தொந்தியும், தொப்பையும் இல்லாமல் ஸ்லிம் அஜித்தை இதில் பார்க்கலாம் என்று வேறு செய்திகள் பரவ ஆரம்பித்திருக்கிறது.
ஆனால் எதையுமே சொல்லாமல் அமைதியாக படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் கெளதம்மேனன்.
படத்துல அஜித்துக்கு என்ன மாதிரியான கேரக்டர், டபுள் ரோலா சிங்கிள் ரோலா இதையெல்லாம் இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனா, சொல்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. அதையெல்லாம் அப்பப்போ சொன்னாத்தான் சுவாரஷ்யமா இருக்கும்.
படம் ஒரு எமோஷனலான ஆக்ஷன் படம். குறிப்பா பெண்களுக்கு இந்தப் படத்தில் அஜித்தை ரொம்பப் பிடிக்கும். அந்தளவுக்கு ஃபேமிலி டிராமாவும் மிக்ஸ் ஆகியிருக்கு. படத்தின் எமோஷன் எபிஸோட்ஸ் எல்லாமே அஜித்தின் தோளில்தான் தூக்கி சுமக்கிறார்!” என்று சின்னதாய் ஒரு தகவலைச் சொல்லி எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார் கெளதம் மேனன்.
படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக வருகிறார் என்பது மட்டும் உண்மை என்கிறார்கள்...
Comments
Post a Comment