லட்சுமிமேனன் செம கொண்டாட்டத்தில்!!!

29th of May 2014
சென்னை::மலையாள நடிகர் பஹத்பாசிலை திருமணம் செய்து கொள்வதாக நஸ்ரியா அறிவித்தபோது, அமலாபால், லட்சுமிமேனன், ப்ரியாஆனந்த், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட நடிகைகள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். காரணம், நேரம் படத்தில் வந்த நஸ்ரியா, குறுகிய காலத்திலேயே தனுஷ், ஆர்யா என்று முன்னணி நடிகர்களுடன் நடித்ததோடு, அடுத்தடுத்து மேல்தட்டு ஹீரோக்களுடன் நடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.
 
ஆனால் திடுதிப்பென்று அவர் திருமண செய்தியை அறிவித்ததால் தங்களுக்கான ஒரு போட்டி நடிகை காலியாகி விட்டார் என்று அதை பார்ட்டி வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், இப்போது அந்த கொண்டாட்ட நடிகை பட்டியலில் இருந்த அமலாபாலும், டைரக்டர் விஜய்யை திடுதிப்பென்று திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக அறிவித்திருப்பதால், மற்ற வளர்ந்து வரும் நடிகைகளை விட லட்சுமிமேனன் செம கொண்டாட்டத்தில் இருக்கிறார்.
 
காரணம், கைவசம் பல படங்களை வைத்திருக்கும் அவரை, அமலாபால், நஸ்ரியாவை வைத்து படம் இயக்கயிருந்த முன்னணி இயக்குனர்கள் இப்போது தொடர்பு கொண்டு வருகின்றனர். அதில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் வெற்றிமாறன் குறிப்பிடத்தக்கவராம். அந்த படத்தில் அமலாபாலை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்த அவர், இப்போது அவர் திருமண பத்திரிகை கொடுத்து வருவதால், தனது அடுத்த ஆப்சனாக அந்த வேடத்துக்கு லட்சுமிமேனன்தான் பொருத்தமாக இருப்பார் என்று தனுஷிடம் கலந்து பேசி, இப்போது லட்சுமிமேனனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
 
இதனால் ஏக சந்தோசத்தில் இருக்கும் லட்சுமிமேனன், தமிழில் தனக்கு ஒரு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது என்று கருதிக்கொண்டு, கோடம்பாக்கத்தில் வீறுநடை போடத்தொடங்கியிருக்கிறார்.

Comments