27th of May 2014
சென்னை:ராக்ஸ்டார், மெட்ராஸ் காபே, பட்டா போஸ்டர் நிக்லா ஹீரோ, மேன் தேரா ஹீரோ ஆகிய மெகா ஹிட் இந்திப் படங்களில் நடித்துள்ள, பிரபல இந்தி பட நாயகி நர்கீஸ் பக்ரி, பிரசாந்த் நடித்துக் கொண்டிருக்கும் சாகசம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்பந்தம் செய்யபப்ட்டுள்ளார்.
பிரம்மாண்ட பொருட்ச்செலவில் பிரசாந்த் நடித்துக் கொண்டிருக்கும் 'சாகசம்' படம் பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் பிரசாந்தின் சாகசங்களை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பாடல் ஒன்று உள்ளது. இப்பாடலில் நர்கீஸ் பக்ரி நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் என்று படக்குழுவினர் நினைத்தனர். நர்கீஸ் பக்ரி இந்திப் படங்கள் மட்டும் இன்றி, ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது 'ஸ்பை' என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து வரும் அவரை, சாகசம் படத்திற்காக அனுகியபோது, அவர் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
தற்போது இந்த பாடல் காட்சியை படம்பிடிப்பதற்க்கா படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது. பிரபல நடன இயக்குநர் ஒருவர் நடனம் அமைக்கவுள்ள இப்பாடல் காட்சி விரைவில் படமாக்கப்பட உள்ளது. ..

Comments
Post a Comment