13th of May 2014
சென்னை::எந்த காலத்திலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். குடும்ப பாங்கான கேரக்டர் என்றால் மட்டும் என்னை அனுகலாம்’. என்று வீட்டு வாசலில் போர்டு மாட்டாத குறையாக பேசி வந்த நடிகைகள் எல்லாம், தற்போது கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றால் நடிப்புத் தொழிலை விட்டுவிட்டு போக வேண்டியதுதான் என்பதை புரிந்து வைத்திருக்கிறார்கள்.
‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘பாண்டிய நாடு’ படங்களில் நடித்த லட்சுமி மேனன் ஆரம்பத்தில் கவர்ச்சியாகவும், முத்த காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவர்தான். ஆனால், சமீபத்தில் விஷாலுடன் ஜோடியாக நடித்து வெளியான ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் முத்தக் காட்சியில் நடித்தார்.
அதைப்போல, தற்போது ’கண்ட நாள் முதல்’, ‘அழகிய அசுரா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நாயகியாக நடித்த ரெஜினாவும் ’கதைக்கு தேவை என்றால் கவச்சியாக நடிப்பது தப்பில்லை’ என்று பேட்டி கொடுத்து, அதன்படி கவர்ச்சியாக சில படங்களில் நடித்தும் வருகிறார்.
Comments
Post a Comment