இது நம்ம ஆளு’ படம் ஏன் தாமதம்? டி.ஆர். விளக்கம்!!!

6th of May 2014
சென்னை::சிம்பு - நயன்தாரா இருவரும் காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இந்தப் படத்தை பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சிம்புவின் தந்தை தயாரிக்க அவரின் தம்பி குறளரசன் இசையமைக்கிறார். படத்தின் 50 சதவீதத்திற்கு மேல் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இது நம்ம ஆளு படம் கைவிடப்பட்டதாக கடந்த சில நாட்களாக மீடியாக்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
 
ஆனால் இந்த செய்திகளை படத்தின் தயாரிப்பாளரும் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் ‘வாலு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது நடைபெறுகிறது. 2 பாடல் காட்சிகளில், ஒரு பாடல் காட்சி படமாக்கி முடிக்கப்பட்டு விட்டது.
 
பாக்கி ஒரு பாடல் காட்சியை படமாக்கினால், அந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து விடும். அதனால ‘வாலு’ படப்பிடிப்பு முடிவடைந்ததும், சிம்பு–நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். ஏற்கனவே படப்பிடிப்பு 65 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. மீதமுள்ள காட்சிகள் விரைவில் படமாக்கப்படும் என்றார்..
 

Comments