13th of May 2014
சென்னை::தந்தி தொலைக்காட்சியில் ‘பொன்னி வள வீரசரித்திரம்’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரின் ஆரம்பத்தில் நடிகர் சிவகுமாரின் பின்னணிக்குரல் கதையைப்பற்றிய ஒரு முன்னோட்டத்தைச் சொல்கிறது. ஆனால் இதில் ஒரு குறிப்பிட்ட இனத்தின் மனதை புண்படுத்தும் வகையில் சிவகுமார் பேசியுள்ளாதாக சில தின்ங்களுக்கு முன் ஒரு சர்ச்சை எழுந்தது.
ஆனால் அப்படி எதையும் பேசவில்லை என சிவகுமார் விளக்கம் அளித்தபின்னும்கூட பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. இதனால் மிகுந்த வருத்தத்திற்கு ஆளான சிவகுமார், “நான் பிறந்த கொங்கு மண்ணில் பிறந்த என் சகோதர இனத்தவருக்கு இந்த தொடர் சிறிது மன வருத்தத்தை அளித்துள்ளதாக தெரிகிறது.
அதனால் தந்தி டிவி நிர்வாகத்திடம் சொல்லி இந்த தொடரின் ஒளிபரப்பை நிறுத்தும்படி கோரிக்கை வைத்தேன். அவர்களும் எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இந்த ‘பொன்னிவள வீர சரித்திரம் தொடரின் ஒளிபரப்பை நிறுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்” என்று விளக்க கடிதம் எழுதியுள்ளார்...
Comments
Post a Comment