சிம்பு படம் ட்ராப் : செல்வராகவனுக்கு கம்பி நீட்டிய த்ரிஷா!!!

16th of May 2014
சென்னை::இரண்டாம் உலகம்’ படத்தில் ஏற்பட்ட பண இழப்புக்கு ஈடாக அதே கம்பெனிக்கு இலவசமாக சிம்புவை வைத்து படம் டைரக்ட் செய்து தருவதாகச் சொல்லியிருந்தார் செல்வராகவன். அதற்காக திரைக்கதை அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த அவர் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தயாரிப்பு நிறுவனத்தை அணுகி  படம் எடுக்க தயாரான போது திடீரென்று தயாரிப்பு நிறுவனம் பின் வாங்கி விட்டது.
 
அதிர்ச்சியடைந்த செல்வராகவன் கட்டுமான கம்பெனியான ரேடியன்ஸ் நிறுவனத்திடம் அந்தக் கதையைச் சொல்லி அவர்களை கரெக்ட் செய்து வைத்திருந்தார். செல்வா சொன்ன கதையைக் கேட்ட மாத்திரத்தில் படம் தயாரிக்க முன் வந்த ரேடியன்ஸ் நிறுவனம் ஏற்கனவே செல்வராகவனுக்கும், பி.வி.பி நிறுவனத்துக்கு இடையே இருந்த ‘இரண்டாம் உலகம்’ பஞ்சாயத்தைக் கேட்டு ஆடிப்போய் பேக்கடித்து விட்டது.
 
இப்போது சிம்புவின் கால்ஷீட் மாதக்கணக்கில் கிடைத்தும் கூட செல்வராகவனை நம்பி படமெடுக்க தயாரிப்பாளர்கள் யாரும்முன்வரவில்லை.

இதற்கிடையே இதே படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருந்தார். அதற்காக கால்ஷீட் தேதிகளைக் கூட ஒதுக்கி வைத்திருந்தார். ஆனால் இப்போது படம் ட்ராப்பாகி விட்ட செய்தியைக் கேட்ட த்ரிஷா செல்வராகவனுக்கு கம்பி நீட்டி விட்டு மொத்த கால்ஷீட்டையும் அஜித் படத்துக்கு கொடுத்து விட்டார்.
 
முன்னதாக கெளதம் மேனன் டைரக்‌ட் செய்யும் அஜித்தின் 55 வது படத்தில் த்ரிஷாவும் நடிப்பதாக செய்தி வந்தது. அந்த செய்தி வெறும் வதந்தியாக மட்டுமே இருந்து வந்த நிலையில் இப்போது அது உறுதியாகியுள்ளது....

Comments