12th of May 2014
சென்னை::சந்தானம் ஹீரோவாக நடித்து திரைக்கு வந்துள்ள படம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்த படம் தெலுங்கு ரீமேக் என்பதால், கதையை எளிதில் பிடித்து விட்டார்கள். ஆனால், கதாநாயகி விசயத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டார்கள். ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று அலையோ அலையென்று அலைந்திருக்கிறார்கள்.

ஏன் தமிழில்தான் பல
நாயகிகள் இருக்கிறார்களே? என்று கேட்கலாம். ஆனால் வடிவேலுவுடன்
இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் நடித்த ஸ்ரேயாவை காமெடியனுடன்
நடித்த நடிகை என்று அதன்பிறகு எந்த ஹீரோக்களும் ஜோடி சேர்க்காமல் டீலில்
விட்டு விட்டதால், இப்போது சந்தானத்துடனும் ஜோடி சேர கோலிவுட் நடிகைகள்
தயங்கி நின்றார்களாம். அதனால்தான் அண்டை மாநிலங்களுக்கு படையெடுத்துள்ளனர்.
ஆனால்
இவர்கள் எதிர்பார்த்தபடி நாயகி கிடைக்காது போக, கடைசியில் மும்பைக்கு
சென்றிருக்கிறார்கள். அங்குதான் இப்போது அப்படத்தில் நடித்திருக்கும்
ஆஷ்னா கிடைத்திருக்கிறார். அந்த வகையில் மும்பை நடிகை தனக்கு கிடைத்ததில்
சந்தானத்துக்கு பெரிய சந்தோசமாம். காரணம், இன்றைக்கு தமிழ் சினிமாவில்
முன்னணியில் இருக்கும் பல ஹீரோக்களின் முதல் படத்தில் மும்பை நாயகிகள்தான்
நாயகியாக நடித்திருக்கிறார்களாம். ஆக, சந்தானத்துக்கும் இப்போது அதே
மும்பை நாயகி செண்டிமென்ட் ஒர்க்அவுட்டாகியிருப்பதால், ஹீரோ
சந்தானத்துக்கு ப்ரைட் பியூச்சர் இருக்கிறது என்று அடித்து
சொல்லிக்கொண்டிருக்கிறார் காமெடியன் சந்தானம்..
Comments
Post a Comment