25th of May 2014
சென்னை::தனது கவர்ச்சிப் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக படக்குழுவினர்
மீது போலீஸில் புகார் அளித்த நடிகை ஸ்ருதிகாசனுக்கு தெலுங்கு சினிமா
எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தற்போது தெலுங்கு சினிமாவில் பல
படங்களில் நடித்து வரும் கமல் ஹாசனின் மூத்த மகள், ஸ்ருதி ஹாசன் அங்கு
கவர்ச்சியாகவும் நடிக்க செய்கிறார்.
சமீபத்தில் ஸ்ருதி ஹாசன்
நடிப்பில் வெளியான 'ஏவடு' என்ற தெலுங்குப் படத்தில் அவர் கவர்ச்சியாக
நடித்துள்ளார். இப்படத்தின் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியாயின. அரை
குறை ஆடையுடன் ஸ்ருதி ஹாசன் ஆபசமாக போஸ் கொடுத்த புகைப்படங்களும் தொடர்ந்து
வெளியாகின. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும், ஸ்ருதி
ஹாசனுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
இதையடுத்து படத்தின்
தயாரிப்பாளர் தில்ராஜுவை தொடர்பு கொண்டு ஸ்ருதி ஹாசன் விளக்கம் கேட்க, அவரோ
ஆபாச படங்கள் எப்படி வெளியானது என்று தனக்கு தெரியாது என கை விரித்து
விட்டார்.
இதையடுத்து ஸ்ருதி ஹாசன் போலீசில் புகார் அளித்தார். ஆபாச
படங்களை வெளியிட்டவர்களை கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும் என்று புகாரில்
குறிப்பிட்டு இருந்தார். போலீசார் இதுகுறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
சினிமா படப்பிடிப்புகளில் போட்டோ எடுக்கும் பத்து போட்டோ கிராபர்களிடம்
விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தெலுங்கு பட உலகினருக்கு கோபத்தை
ஏற்படுத்தி உள்ளது. ஸ்ருதி ஹாசன் ஏற்கனவே நிறைய படங்களில் கவர்ச்சியாக
நடித்துள்ளார் என்றும் அந்த படங்களும் இன்டர்நெட்டில் பரவியுள்ளன என்றும்
அவர்கள் கூறுகின்றனர். ஸ்ருதி ஹாசன் புகார் அளித்துள்ளது தேவையற்றது என்று
தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்..
Comments
Post a Comment