3rd of May 2014
சென்னை::61வது தேசிய திரைபட விருதுகள் வழங்கும் விழா இன்று (மே 3) டெல்லியில் நடைபெறுகிறது.
தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ் படமாக ராம் இயக்கத்தில் வெளியான 'தங்கமீன்கள்' தேர்வு செய்யப்பட்டது. அப்படத்தில் இடம்பெற்ற "ஆனந்த யாழை மீட்டுகிறார்' என்ற பாடல் இயற்றிய முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியர் விருது, அதில் நடித்த சாதனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது அறிவிக்கப்பட்டது.
மேலும், இயக்குநர் பாலு மகேந்திராவின் 'தலைமுறைகள்', தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'நர்கீஸ் விருது'க்கு தேர்வானது. 'தர்மம்' சிறந்த தமிழ் திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டது. 'வல்லினம்' படத்துக்கு சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது ஜோசஃபுக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த இயக்குநருக்கான விருது ஹன்ஸல் மேத்தா, சிறந்த நடிகருக்கான விருது 'ஷாஹித்' படத்தில் நடித்த ராஜ்குமார் ராவ், 'பேரறியாதவர்' என்ற மலையாள படத்தில் நடித்த சுராஜ் வெஞ்ஞாரமூடு ஆகியோருக்கும் சிறந்த நடிகைக்கான விருது 'லையர்ஸ் டைஸ்' என்ற படத்தில் நடித்த கீதாஞ்சலி தாபா, ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
ஹிந்தி மொழி கவிஞரும் பிரபல பாடலாசிரியருமான குல்ஸாருக்கு இந்திய திரைப்படத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது வழங்கும் விழா இன்று (சனிக்கிழமை) டெல்லி விஞ்னான் பவனில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்..

Comments
Post a Comment