மீண்டும் தெலுங்கில் த்ரிஷா: மீண்டும் சூடு பிடிக்கும் த்ரிஷாவின் மார்க்கெட்!!!

29th of May 2014
சென்னை::நாயகியாக அறிமுகமாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆனாலும், இன்னும் அதே இளமையுடன், ஒல்லியான தேகத்துடன் இருந்து வருபவர் த்ரிஷா.
 
தெலுங்கில் சில வருடங்கள் முன்னர் வரை நம்பர்1 நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா ஆகியோரின் போட்டியை சமாளிக்க முடியாமல் தெலுங்கிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார்.
 
தெலுங்கில் அவர் ஹீரோயினாக நடித்து கடைசியா வெளிவந்த படமான ‘தம்மு’ 2012ம் ஆண்டு வெளியானது. அதன் பின், அவர் எந்த தெலுங்கு படத்திலும் நடிக்கவில்லை. தமிழில் மட்டும் நடித்து வந்தார்.
 
இப்போது, ஏறக்குறைய இரண்டு வருடம் கழித்து தெலுங்கில் நடிக்க உள்ளார். தெலுங்குத் திரையுலகின் அதிரடி ஆக்ஷன் ஹீரோவான பாலகிருஷ்ணா அடுத்து நடிக்கப் போகும் படத்தில் த்ரிஷாதான் ஹீரோயின்.
 
அஜீத்துடன் மங்காத்தா என்ற ஹிட் படத்தில் நடித்த த்ரிஷாவின் மார்க்கெட் அதையடுத்து ஆட்டம் கண்டது. பின்னர் ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படத்தில் நடித்தார். அந்த படம் ஓரளவு வெற்றி பெற்றது. பின்னர் ஜெயம்ரவியுடன் பூலோகம் படத்தில் இரண்டு ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
 
ஆனபோதும், படங்கள் தேடி வரும் என்று த்ரிஷா காத்திருக்கவில்லை.தனது அபிமான ஹீரோக்கள், டைரக்டர்களுக்கு மாறி மாறி போன் போட்டு ஆதரவு கோரி வந்தார். அதன்காரணமாக, இரண்டாம் உலகம் படத்தை இயக்கிய செல்வராகவன் தனது அடுத்த படத்தில் முன்னணி நடிகை தேடியபோது, அப்படத்தின் நாயகனான சிம்பு, த்ரிஷாவுக்கு ரெகமண்ட் செய்தார்.
 
அதேபோல், அஜீத்தின் 55வது படத்துக்கு அனுஷ்காவை ஒரு நாயகியாக புக் பண்ணியபிறகு, இன்னொரு நாயகியாக யாரை கமிட் பண்ணலாம் என்று யோசித்த கெளதம்மேனன், த்ரிஷா ஓயாமல் தன்னை நச்சரித்துக்கொண்டிருந்ததால், சரி அவரும் தனது விண்ணைத்தாண்டி வருவாயா ஹிட் நடிகைதானே என்று அப்படத்தில் இன்னொரு நாயகியாக கமிட் பண்ணி விட்டார்.
 
இதனால் தமிழில் ஓரளவு திருப்தியான படங்களை கைப்பற்றி விட்ட த்ரிஷா, அடிக்கடி ஐதராபாத்துக்கும் படவேட்டை நடத்தி வந்தார். அதன்விளைவாக, தற்போது பாலகிருஷ்ணா நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட தெலுங்கில் உள்ள அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து விட்ட த்ரிஷா, பாலகிருஷ்ணாவுடன் மட்டும் இந்த படத்தில்தான் முதன்முறையாக ஜோடி சேருகிறாராம். ஆக, த்ரிஷாவின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
 
பாலகிருஷ்ணாவுடன் த்ரிஷா ஜோடி சேரும் முதல் படம் இது.

பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என த்ரிஷா ட்வீட் செய்துள்ளார்..

Comments