சென்ட்ரலில் குண்டு வெடிப்பு: நடிகர், நடிகைகள் அதிர்ச்சி!!!

2nd of May 2014
சென்னை::அரசியலில் மட்டுமல்ல சமூக அளவில் விழிப்புணர்வு இயக்கங்களில் திரைப்பட நட்சத்திரங்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் கோலிவுட் ஸ்டார்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர்.குஷ்பு:

சென்னை வந்து இறங்கியவுடன் குண்டு வெடித்த தகவல் என் மனதை பெரிதும் பாதித்தது. இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டி கொள்கிறேன்.ஸ்ருதிஹாசன்: சென்னையில் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் என் மனதை பெரிதும் பாதித்திருக்கிறது. ஒவ்வொருவரும் தயவு செய்து பத்திரமாக இருங்கள்.மாதவன்: சென்னையில் குண்டு வெடிப்பா? தாங்கி கொள்ள முடியவில்லை.ஆதி:

பெரிய குண்டு வெடிப்பு மிரட்டலை சென்னை எதிர்கொண்டிருக்கிறது. பாதுகாப்பாக இருங்கள். பலியான சுவாதி குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.சிபிராஜ்: உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். சென்னையில் குண்டு வெடிப்பா? குற்றவாளிகளை விரைவில் பிடிப்பார்கள். அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பார்கள் என்று நம்புகிறேன்.நகுல்: அப்பாவிகளின் உயிரை குறி வைப்பது தாங்கி கொள்ள முடியாத சோகம். ஜீவா: பிரபஞ்சத்திலேயே தமிழ்நாடுதான் பாதுகாப்பானது. குண்டுவெடித்தது உண்மையா? அல்லது விபத்தா? மே தினத்தன்று இப்படியொரு சம்பவமா, நம்பவே முடியவில்லை.ஜெயம் ரவி:

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இது அதிர்ச்சி அளிக்கிறது.விக்ரம் பிரபு: அப்பாவிகளை பலி வாங்குவது எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது.வெங்கட் பிரபு: சென்னை மிக பாதுகாப்பான இடம் என்று எண்ணி இருந்தேன். சென்னை சென்ட்ரலில் குண்டுவெடிப்பு அறிந்து வேதனை அடைந்தேன்..
  

Comments