இதுவரை எந்தவித தகவலும் வெளியிடாமல் கார்த்தி நடிக்கும் புதிய படம்; மெட்ராஸ்!!!

22nd of May 2014
சென்னை::பருத்தி வீரன் கார்த்தி சில படங்களின் வெற்றி காரணமாக வேகமாக வளர்ந்து வந்தார். அந்த நேரங்களில் அவர் தனது அண்ணன் சூர்யாவுடன் இணைந்து ஏதாவது சினிமா விழாக்களுக்கு வந்தால், எம்.ஜி.ஆர்., சிவாஜி ரேஞ்சுக்கு சில சினிமா பிரபலங்கள் அவர்களை உயரத்தில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
 
ஆனால், அதன்பிறகு கார்த்தி நடித்த சில படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து அவரது காலை வாரிவிட்டதால், தடுமாறிப்போய்க் கிடக்கிறார். சகுனி, அலெக்ஸ்பாண்டியனை அடுத்த அவர் அதிக நம்பிக்கை வைத்து நடித்த அழகுராஜா, பிரியாணி படங்களும் தோற்று விட்டதால் இப்போது அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் படத்தை ரொம்பவே எதிர்பார்த்துககொண்டிருக்கிறார்.
 
இந்த படத்தைப்பற்றி இதுவரை எந்தவித தகவலும் வெளியிடாமல் நடித்து வரும் கார்த்தி, படத்தின் தலைப்பு விசயத்தில் ரொம்பவே யோசிக்கச்சொன்னாராம. அதனால் முதலில் கபாலி என்று வைத்த டைரக்டர் ரஞ்சித், அதையடுத்து பலத்த ஆலோசனைக்குப்பிறகு இப்போது மெட்ராஸ் என்றொரு தலைப்பை வைத்திருக்கிறாராம்.
 
இந்த தலைப்பு கதைக்கு ரொமப் பொருத்தமாக இருப்பதாக ஓ.கே செய்திருக்கும் கார்த்தி, தனது பிறந்த நாளான மே 25-ந்தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடப்போகிறாராம்..

Comments