30th of May 2014
சென்னை::இதுவரை எந்தவொரு தமிழ், தெலுங்கு நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை
சம்பளமாக வாங்கியது இல்லை என்று சொல்லும் அளவுக்கு எக்கச்சக்கமாக
உயர்ந்திருக்கிறது நயன்தாரா, அனுஷ்காவின் சம்பளம். இவர்களின் சம்பளம்
எவ்வளவு தெரியுமா? 3 கோடி ரூபாய்! இருவருக்கும் மார்க்கெட் உச்சத்தில்
உள்ளது. எனவேதான் சம்பளத்தை வரலாறு காணாத அளவு உயர்த்தி உள்ளதாக காரணம்
சொல்கின்றனர் திரையுலகைச் சேர்ந்தவர்கள்..
ஹிந்தியில்
ஹிட்டான கஹானி படத்தின் தெலுங்கு ரீமேக்கான அனாமிகா படத்துக்காக
நயன்தாராவுக்கு 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. இந்தப் படம் நீ எங்கே என்
அன்பே என்ற பெயரில் தமிழில் வெளியானது. இரண்டு மொழிகளிலும் படம் அட்டர்
ப்ளாப். தமிழில் அஜீத் ஜோடியாக நடித்த ஆரம்பம், ஆர்யாவுடன் நடித்த
ராஜாராணி, உதயநிதியுடன் நடித்த இது கதிர்வேலன் காதல்ஆகிய மூன்று படங்களுமே
பெரிய வெற்றியை அடையவில்லை.நயன்தாரா அது பற்றி கவலையேப் படாமல் தன்
சம்பளத்தை 3 கோடியாக்கிவிட்டார்.
இவரைப்போல்
அனுஷ்காவின் சம்பளமும் விண்ணைத்தொடுமளவுக்கு உயர்ந்துவிட்டது. ருத்ரமாதேவி
என்ற சரித்திரப் படத்தில் நடிக்க இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்
அனுஷ்கா. அடுத்தடுத்து தேடி வந்த படங்களில் நடிக்க மூன்று கோடி சம்பளம்
வாங்கி இருக்கிறாராம்..
Comments
Post a Comment