21st of May 2014
சென்னை::ரஜினிகாந்த், தனுஷ் படங்களுக்கு மட்டும் நயன்தாரா குத்து ஆட்டம்போட கால்ஷீட் ஒதுக்குவது எப்படி என்பதற்கு அவரது தரப்பில் பதில் வந்தது.ரஜினி நடித்த ‘சிவாஜி படத்தில், ‘காவிரி ஆறும் கைகுத்தல் அரிசியும்.. பாடலுக்கு குத்தாட்டம்போட்டார் நயன்தாரா. அதன்பிறகு ஜோதிகா பிரதான வேடத்தில் நடித்த ‘சந்திரமுகி படத்தில் 2வது ஹீரோயினாக நடித்தார். பிஸியாக நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் ‘யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுடன் நடிக்க உடனடியாக கால்ஷீட் ஒதுக்கித் தந்த நயன்தாரா
பின்னர் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். ஆனால் அதே சமயம் சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் ஒரு பாடலுக்கு ஆட அவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகே அந்த ஒரு பாட்டுக்கு அஞ்சலி ஆடினார்.
தற்போது ரஜினி நடிக்கும் ‘லிங்கா படத்தில் மீண்டும் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்டிருக்கிறார் நயன்தாரா. இதில் சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். ‘ரஜினி, தனுஷ் படங்களில் மட்டும் நயன்தாரா குத்தாட்டம் ஆட ஒப்புக்கொள்வது எப்படி?என்று கேட்டபோது,‘ரஜினி சூப்பர் ஸ்டார். தனுஷ் நயனின் நல்ல நண்பர். இதுதான் அதன் ரகசியம் என்று பதில் வந்தது..
Comments
Post a Comment