1st of May 2014
சென்னை::கமல்ஹாசன் பட ஷூட்டிங் லொகேஷன் ஆஸ்திரேலியாவிலிருந்து துருக்கிக்கு மாற்றப்பட்டது.எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த நாடக நடிகர் மனோரஞ்சன், 21ம் நூற்றாண்டின் சூப்பர் ஸ்டார் என 2 வேடத் தில் கமல் நடிக்கும் படம் ‘உத்தம வில்லன். பூஜா குமார், ஆண்ட்ரியா ஹீரோயின்கள். இதன் ஷூட்டிங் கர்நாடகா, தமிழ்நாடு என மாறி மாறி நடந்து வருகிறது.

முக்கிய காட்சிகள் படமாக்க ஆஸ்திரேலியா செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று அந்த லெகேஷன் மாற்றப்பட்டு துருக்கி நாட்டிற்கு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி பட குழு கூறும்போது,‘இம்மாதம் இறுதி அல்லது மே மாதம் தொடக்கத்தில் துருக்கி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அந்நாட்டில் முக்கிய லொகேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் இந்தியா திரும்பிவந்ததும் மத்திய பிரதேசத்தில் ஷூட்டிங் நடக்கிறது. இப்படத்துக்கு பெங்களூர், மும்பையில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்படுகிறது. முதலில் 21ம் நூற்றாண்டின் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இதையடுத்து 8வது நூற்றாண்டு ஷூட்டிங் நடக்க உள்ளது. வரும் ஜூன் மாதம் வரை பிரேக் இல்லாமல் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என்றனர்...
Comments
Post a Comment