அஜீத் - அனுஷ்கா காட்சிகள் ரகசிய இடத்தில் ஷூட்டிங்!!!

9th of May 2014
சென்னை::அஜீத் - அனுஷ்கா நடித்த காட்சியை ரகசியமாக படமாக்கினார் கவுதம் மேனன்.கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்துக்காக ரகசிய இடத்தில் ஷூட்டிங் நடத்தப்பட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. ‘பாஹுபாலி ஷூட்டிங்கில் இருந்த அனுஷ்காவுக்கு, ஸ்பெஷல் நண்பர் ஒருவர் செல்போனில் அழைக்க திடீரென்று ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து கொண்டு சென்னைக்கு புறப்பட்டார்.
 
தொடர்ந்து கவுதம் மேனன், அஜீத் பட ஷூட்டிங்கில் பங்கேற்க வந்தார். கடந்த 3 நாட்களாக பட குழுவில் பலருக்கு ஓய்வு தரப்பட்டிருந்தாலும் கேமராமேன் மற்றும் இரண்டொரு லைட்மேன் ஆகியோருடன் ரகசிய இடத்துக்கு கவுதம் மேனன் சென்றார். அங்கு அஜீத் & அனுஷ்கா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
 
ரகசியமாக ஷூட்டிங் நடந்ததற்கு காரணம் கதையின் முக்கிய காட்சி படமாக்கப்பட்டதுதான் என்று ஒரு தரப்பு சொன்னாலும் அஜீத் - அனுஷ்கா இருவரின் நெருக்கமான காட்சியை படமாக்கவே குறைந்த எண்ணிக்கையில் படக்குழுவினருடன் ஷூட்டிங் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மறைந்திருக்கும் ரகசியம் படம் ரிலீஸ் ஆகும் போதுதான் தெரியும் என்கின்றனர்....
 

Comments