20th of May 2014
சென்னை::லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்த மாதவன்,
அதன்பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அதையடுத்து சன் கிளாஸ்
என்ற வங்காள மொழிப்படத்தில் நடித்தவர், நைட் ஆப் தி லிவிங் டெட் என்ற
ஆஙகில படத்திலும் நடித்து வருகிறார். அப்படத்தின் ஐந்து முக்கிய
கேரக்டர்களில் மாதவனும் ஒருவர்.
இந்த நிலையில்,
பாலிவுட்டில் பிரபல குத்துச்சண்டை வீரர் மேரி கோம் வாழ்க்கை வரலாற்றில் ஒரு
படம் தயாராகிறது. அதில், பிரியங்கா சோப்ரா, மேரி கோம் வேடத்தில்
நடிக்கிறார். அவருக்கு குத்துச்சண்டை பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக
மாதவன் நடிக்கிறாராம். இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் சென்று அங்குள்ள ஒரு
குத்துச்சண்டை மாஸ்டரிடம் சில மாதங்களாக முறையாக பயிற்சி எடுத்துள்ளார்
மாதவன்.
அதுமட்டுமின்றி, குத்துச்சண்டை
பயிற்சியாளர் என்கிறபோது வழக்கமான கெட்டப் செட்டாகாது என்று தனது பாடி
லாங்குவேஜை மாற்றியிருக்கும் மாதவன், ஹேர் ஸ்டைலையும்
மாற்றிக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் மாதவனுக்கு இன்னொரு
பயிற்சியாளருடன் மோதிக்கொள்ளும் ஒரு குத்துச்சண்டை காட்சியும் உள்ளதாம்....
Comments
Post a Comment