ஊரே கிறிஸ்துமஸ் கொண்டாடும்.. எனக்கு மட்டும் அன்னைக்கு தீபாவளிடா”..!!!

2nd of May 2014
சென்னை::தன்னுடைய தயாரிப்பில் உருவான தங்க மீன்கள் படம் தேசியவிருதுகள் பெற்றது, அஜித் படத்தை இயக்குவது என இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் கௌதம் மேனன். இந்தப்படத்தில் அஜித்திற்கு அதிரிபுதிரியான ஆக்‌ஷன் ரோல். போதாததற்கு பஞ்ச் டயலாக்குகளும் கூட உண்டு..
 
சாம்பிளுக்கு மட்டும் ஒன்று. “நாலு நாள்ல ஊரே கிறிஸ்துமஸ் கொண்டாடும்.. ஆனா எனக்கு மட்டும் அன்னைக்கு தீபாவளிடா..” பஞ்ச் கேட்கும்போதே உள்ளுக்குளே பற்றி எரியும் ஆக்‌ஷன் தெரியுது இல்லையா.? அதேபோல அஜித்திற்கு இணையான ரோல் அனுஷ்காவிற்கும். இந்தப்படத்தில் ஆக்‌ஷன் மட்டுமின்றி ஃபேமிலி செண்ட்மெண்ட்ஸுக்கும் குறைவில்லையாம்....
  

Comments