சென்னை::மின்னல் வேகத்தில் ஜெட் விமானத்தில் பறந்தார் இலியானா.டோலிவுட்டுக்கு முழுக்குபோட்டுவிட்டு பாலிவுட்டுக்கு சென்றார் இலியானா. ‘பர்பி உள்ளிட்ட 3 இந்தி படங்களில் நடித்தார். தற்போது ‘ஹேப்பி என்டிங் படத்தில் நடித்து வருகிறார். ஜெட் விமானத்தில் பறக்க வேண்டும் என்பது இலியானாவுக்கு தீராத ஆசை.
சமீபத்தில் அந்த ஆசை நிறைவேறியது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இலியானா, ‘ஜெட் விமானத்தில் பறக்க வேண்டும் என்பது எனது கனவு. அது நனவானபோது வியப்பில் ஆழ்ந்தேன். தற்போது வழக்கமான பணிகளுக்கு திரும்பிவிட்டேன். ஜெட்டில் பறந்த தகவல் அறிந்ததும் பலர் எனக்கு மெசேஜ் அனுப்பி வாழ்த்து தெரிவித்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்......
Comments
Post a Comment