ரசிகர்களுக்கு நன்றி:ட்விட்டரில் இணைந்த ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!!!

6th of May 2014
சென்னை::இந்திய சினிமாத்துறையின் முக்கிய நடிகர்கர்களில் ஒருவர் ரஜினிகாந்த். ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவரது நடிப்பில் உருவான கோச்சடையான் வருகிற வெள்ளிக்கிழமையன்று வெளியாகவுள்ளது. இப்படத்ததிற்கு உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் லிங்கா என்ற படத்தில் ரஜினி தற்போது நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்றுமுன்தினம்  ரஜினிகாந்த் ட்விட்டர் இணையதளத்தில் இணையப்போவதாக அறிவித்தார். மேலும்   இதுகுறித்து அவர் கூறுகையில் மாறி வரும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்றார் போலவும் இணையத்தில் உள்ள ரசிகர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ளவும் தனது கருத்துக்களை பரிமாறி கொள்ளவும் ஒரு தளம் தேவைப்படுகிறது” என்று கூறினார். அதன்படி நேற்று தனது பெயரில் ட்விட்டர் கணக்கு தொடங்கிய ரஜினிக்கு சில மணி நேரங்களிலேயே அவரது ரசிகர்கள் அவரை இணையத்தில் பின்பற்ற தொடங்கினர். இதுவரை நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 150000க்கும் மேற்பட்டோர் ரஜினியுடன் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ரஜினி தனது வலைத்தளத்தில் “ கடவுளுக்கு வணக்கம். உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் ரசிகர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புதுமையான டிஜிட்டல் பயணம் உண்மையிலேயே வியப்பளிக்கிறது” என்று தெரிவித்திருந்தார்...
 

Comments