29th of May 2014
சென்னை::மிஸ். மெட்ராஸாக இருந்த த்ரிஷா ஜூனியர் ஆர்டிஸ்டாக சில படங்களில் நடித்து (ex.ஜோடி), பிறகு இந்தியாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பிரியதர்ஷன் இயக்கத்தில் லேசா லேசா என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சாமி, கில்லி, திருப்பாச்சி என்று வெற்றிப் படங்களில் நடித்து, கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுக் கன்னியாக இரவில் அவரகளின் படுக்கையறையில் ரகசியமாக குடிபெயர்ந்தார்.

அதுமட்டுமில்லாமல் சினிமாவில் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருபவர் சினிமா மட்டுமில்லாமல், சமூக சேவையிலும் ஆர்வம் உள்ளவர். பிராணிகள் நல அமைப்பிலும் உள்ளார். இவரது உதவியால், பல விலங்குகளின் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது. தன் பிறந்த நாளில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவது, சுற்றுப்புற சூழலை காக்க மரக்கன்றுகள் நடுவதிலும் ஆர்வம் கொண்டுள்ளார்.
இந்நிலையில், த்ரிஷா தன் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதி மொழி பத்திரம் கொடுத்துள்ளார். தான் இறந்த பிறகு, கண், இருதயம், கிட்னி, நுரையீரல், கணயம் ஆகியவற்றை, மற்றவர்களுக்கு பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment