19th of May 2014
சென்னை::தனுஷ் நடித்துவரும் ‘வேலையில்லா பட்டதாரி’ பட வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.. தனுஷுக்கு இது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேல்ராஜ் முதன்முதலாக இந்தப்படத்தின் மூலம் டைரக்ஷனில் அடியெடுத்துவைத்திருக்கிறார்.
பொதுவாகவே தனுஷ் – விவேக் காமெடி காம்பினேஷன் 100 சதவீதம் காமெடிக்கு உத்தரவாதம் தரும்.. இதை ‘படிக்காதவன்’, ‘மாப்பிள்ளை’, ‘உத்தம புத்திரன்’ படங்களில் இவர்கள் இருவரும் ஏற்கனவே நிரூபித்துள்ளனர்.
இப்போது மீண்டும் ‘வேலையில்லா பட்டதாரி’யில் தனுஷுடன் கைகோர்த்துள்ளார் விவேக். கூடவே விவேக்கின் வலதுகையான செல் முருகனும்… ஆக, இன்னொரு காமெடி திருவிழாவுக்கு ரசிகர்கள் தயாராக வேண்டியதுதான்.
இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃப்லிம்ஸ்தான்
இந்தப்படத்தையும் தயாரிக்கிறது..
இந்தப்படத்தையும் தயாரிக்கிறது..

Comments
Post a Comment