இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு கடத்தல் மிரட்டல்!!!

13th of May 2014
சென்னை::பிரபல ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த நபர்கள், ரூ.20 லட்சம் பணம் கொடுக்கா விட்டால் உங்கள் கணவரை கடத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதுபற்றி சுமா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மிரட்டல் ஆசாமிகள் பேசிய அழைப்புகளை வைத்து துப்பு துலக்கிய போலீசார், இதுதொடர்பாக திருமலை மற்றும் அவரது நண்பர்கள் அருணாச்சல பாண்டியன், முத்துகிருஷ்ணன் ஆகியோரைக் கைது செய்தனர். விசாரணையில் ஹாரிஸ் ஜெயராஜின் தந்தையிடம் டிரைவராக வேலை பார்த்த திருமலை, தனது நண்பர்களுடன் சேர்ந்து இவ்வாறு மிரட்டியது தெரியவந்தது.
 
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கடத்துவதாக மிரட்டல் விடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்....

Comments