கத்துக்குட்டி’ டைரக்டர் கையில் சிக்கிய நரேன்!!!


18h of May 2014
சென்னை::
முகமூடி’ படத்தில் வில்லனாக நடித்தாலும் நடித்தார், அதன்பின் ரொம்ப நாளாக தமிழ்சினிமாவில் நரேனை பார்க்கவே முடியவில்லை. சரிதான் மலையாளத்திலேயே செட்டில் ஆகிவிட்டார்போல என்று நினைத்தால் சத்தமில்லாமல் ‘கத்துக்குட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் நரேன்.
 
படத்தை இயக்கும் இரா.சரவணன் யாரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்க்காதவராம். எந்த அனுபவமும் இல்லாதவனைத்தான் கத்துக்குட்டி என்று சொல்வார்கள். அப்படி தஞ்சை மண்ணில் சுத்திக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் தன் தந்தையின் கனவை நிறைவேற்றுவது தான் படத்தின் கதை.
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிவரும் இந்தப்படத்தில் நரேனுடன் கைகோர்த்திருக்கிறார் சூரி.
 
இன்னொரு சிறப்பம்சமாக பாரதிராஜாவின் தம்பியான ஜெயராஜ் நரேனின் தந்தையாக இதில் அறிமுகமாகிறார்........

Comments