- Get link
- X
- Other Apps
சென்னை::கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்கு 'சத்யா' என்று
தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித்துக்கு
ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் காமெடி வேடத்தில் விவேக் நடிக்கிறார். விவேக், அஜித் பங்கேற்ற காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த படத்தில் நடிப்பது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள விவேக், "அஜீத்துடன் இணைந்து நடிப்பது சுலபமாக இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இன்னொரு கதாநாயகியாக
த்ரிஷா நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் துவங்கிய
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை ஈ.சி.ஆர். மற்றும் சென்னையை சுற்றியுள்ள
பகுதிகளில் நடத்தி முடித்தார்கள். இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்டப்
படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது. இதனையும் சென்னையிலேயே நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்டப் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய படக்குழு
இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் விவேக், அஜித் சம்பந்தபட்ட காட்சிகளை
படமாக்கி வருகிறது. இப்படத்திற்கு இயக்குனர் கௌதம் மேனன் ’சத்யதேவ்’ என்று
பெயர் வைத்திருப்பாக சொல்லப்படுகிறது....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment