பரபரப்பு ஏற்படுத்தாத 'கோச்சடையான்!!!

24th of May 2014
சென்னை::ரஜினிகாந்த் படங்கள் வெளியானலே திரையுலகத்தில் மட்டும் இன்றி, தமிழகத்திலும் பெரும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். அந்த வகையில் நேற்று வெளியான கோச்சடையான் படத்தைப் பொறுத்தவரை எந்தவித பரபரப்பும் ஏற்படவில்லை.

கோச்சடையான் கிரீன் மரத்தான் ஓட்டம் ஒன்றை ரஜினியின் மனைவி லதா ஏற்பாடு செய்து, தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்தினார். இது போல சில நிகழ்ச்சிகளில் கோச்சடையான் படம் தொடர்பாக நடந்தாலும், படம் வெளியீட்டான நேற்றைய தினம் எந்தவித பரபரப்பும் ஏற்படவில்லை. திரையரங்குகளிலும் கூட்டம் குறைவாக இருப்பதாகவே கூறப்படுகிறது.

இதற்கு காரணம் 'கோச்சடையான்' அனிமேஷன் படமாக உருவாகியிருப்பது தான் என்று கூறப்படுகிறது. கதை, திரைக்கதை இரண்டிலும் கோச்சடையான் சிறப்பாக இருந்தாலும், அதை அனிமேஷன் அல்லாமல், நிஜமாக எடுத்திருந்தால் படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்திருக்கும் என்றும் திரையுலகினர் சிலர் கூறிவருகிறார்கள்...

Comments