31st of May 2014
சென்னை::கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கியவர் சிவா. முன்னதாக
தெலுங்கில் சில ஹிட் படங்களை இயக்கி வந்த இவர், அஜீத்திடமும் கதை சொல்லி
ஓ.கே வாங்கி வீரம் படத்தை இயக்கினார். அப்படம் அஜீத்துக்கு கமர்சியல்
ஹிட்டாக அமைந்ததால் அடுத்தபடியாகவும் சிவாவிடம் அவர் ஒரு கதையை
கேட்டிருப்பதாக செய்தி பரவி கிடக்கிறது. இந்த நிலையில், அந்த படத்தில்
அஜீத்துக்கு ஜோடியாக தற்போது இந்தியில் அதிரடிப்படங்களை கொடுத்து வரும்
வித்யாபாலன் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகி கூடுதல் பரபரப்பினை
கூட்டியிருக்கிறது.
ஆனால், இதுபற்றி டைரக்டர்
சிவா கூறுகையில், அஜீத்திடம் நான் சில கதைகளை சொன்னேன். அதில் ஒன்றை அவர்
ஓ.கே செய்து ஸ்கிரிப்ட்டை நன்றாக ரெடி பண்ணுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அதனால், தற்போது வித்தியாசமான காட்சிகளை வசனங்களை கோர்த்து ஸ்கிரிப்ட்
ரெடி பண்ணும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறேன்.
இந்த
நேரத்தில், கதாநாயகியாக இந்தி நடிகை யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று
பரிசீலனை செய்தபோது, வித்யாபாலனின் பெயரையும் எடுத்துக்கொண்டோம். ஆனால்,
இந்த படம் குறித்து இன்னும் அவரை அணுகவில்லை. கதை சம்பந்தப்பட்ட வேலைகள்
முடிந்து, அஜீத் சார் கால்சீட் கொடுத்த பிறகுதான். அந்த தேதிகளைப்
பொறுத்து எந்த நடிகை கிடைக்கிறாரோ அவரை வைத்து படப்பிடிப்பு நடத்துவோம்.
அதனால், அஜீத்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார் என்பது இன்னும்
முடிவெடுக்கப்படாத செய்திதான் என்கிறார் சிவா.
Comments
Post a Comment