அஜித் படத்தின் தலைப்பு 'சத்யா'!!!

8th of May 2014சென்னை::கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் படத்திற்கு 'சத்யா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்தாக தகவல் வெளியாகியுள்ளது.

வீரம் படத்தை தொடர்ந்து அஜித் கெளதம் மேனன் இயக்கம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்காவும், எமி ஜாக்சனும் நடிக்கிறார்கள்.

ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அஜித் நடித்து வரும், சமீபத்திய படங்களுக்கு தலைப்பு ஒரு பிரச்சனையாகி வருகிறது. ஏறகனவே விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்ஹ்ட ஆரம்பம் படத்திற்கும் இதே போல தான் தலைப்பு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, முழு படமும் முடிந்த பிறகே தலைப்பு வைக்கப்பட்டது. தற்பொது, இந்த படத்திற்கும் என்ன தலைப்பு வைக்கலாம் என்ற பரீசிலனை நீண்டுக்கொண்டே போகிறது.

பல தலைப்புகளை படக்குழுவினர் பரிலீசித்து வர, இறுதியில், இப்படத்தில் அஜித்தின் கதாபாத்திர பெயரான 'சத்யா' என்பதையே தலைப்பாக வைத்துவிடலாம் என்று இயக்குனர் கெளதம் மேனன் முடிவு செய்துள்ளாராம்.
  

Comments