சரத்குமாரின் மகளான வரலட்சுமியை புரமோட் பண்ணும் விஷால்!!!

14th of May 2014
சென்னை::சரத்குமாரின் மகளான வரலட்சுமி, சிம்புவுக்கு ஜோடியாக போடா போடி படத்தில் அறிமுகமானார். அப்படம் ப்ளாப். பிறகு சுந்தர்.சி. இயக்கத்தில் மதகஜராஜா படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதிப்பிரச்சனை காரணமாக கணற்றில் போட்ட கல்லாகிவிட்டது மதகஜராஜா. இப்படத்தை தானே வாங்கி வெளியிட விஷால் முயன்றார். அதில் அவருக்கு தோல்வியே ஏற்பட்டது.
 
வரலட்சுமி நடித்த படங்கள் இரண்டும் தயாரிப்பாளர்களை காலி பண்ணியதால் ராசியில்லாத நடிகையாகிப்போனார். பட வாய்ப்பு இல்லாமல் சும்மாவே இருந்ததால், விஷால் செல்லுமிடமெல்லாம் அவரது நிழல்போல் சென்று கொண்டிருந்தார் வரலட்சுமி. மகள் நடிகையானது சரத்குமாருக்குப் பிடிக்கவில்லை என்பதால், அவர் வரலட்சுமிக்கு உதவி செய்யவில்லை. மாறாக மகளுக்கு பட வாய்ப்பு வராதது நல்லதுதான் என்று எண்ணினார். நடிகர் சங்க விவகாரத்தில் சரத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் விஷால், வரலட்சுமி விஷயத்திலும் சரத்தின் விருப்பத்துக்கு மாறாக அவரை பிஸியான நடிகையாக்க வேண்டும் என்று உறுதிபூண்டிருக்கிறாராம். அதன்படிதான், பாலாவிடம் சிபாரிசு செய்து தாரை தப்பட்டை படத்தில் கதாநாயகி வாய்ப்பு பெற்றுத்தந்தார்.
 
அடுத்து, கன்னட நடிகர் கிச்சா சுதீப்பிடம் சிபாரிசு செய்து வரலட்சுமிக்கு கன்னட பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததும் விஷால்தான். அதுமட்டுமல்ல, வரலட்சுமியை போட்டோ ஷூட் பண்ண வைத்த அந்த புகைப்படங்களை தன் பி.ஆர்.ஓ. மூலம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் விஷால். இதன் மூலம் சரத்குமார் கண்டுகொள்ளாமல் விட்ட வரலட்சுமியை விஷால் புரமோட் பண்ண ஆரம்பித்திருக்கிறார் விஷால்.
 
என்னமோ நடக்குது...!?....

Comments