15th of May 2014
சென்னை::இயக்குநர் விஜய் நடிகை அமலா பால் திருமணம் சென்னையில் ஜூன் 12-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இரு வீட்டாரும் திருமண அழைப்பிதழ் கொடுப்பதில் தீவிரமாக உள்ளனர்.
கிரீடம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஜய். அவருக்கும் நடிகை அமலா பாலுக்கும் காதல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் வெளியானதும் இருவரும் மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டனர். இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்துவருகிறது.
இதற்கிடையில் ‘சைவம்’ படத்தை வெளியிடும் வேலையில் இயக்குநர் விஜய்யும், ஒப்புக்கொண்ட தமிழ், மலையாளப் படங்களை விரைவாக நடித்துக்கொடுக்கும் பணியில் அமலா பாலும் தீவிரமாக இருக்கிறார்கள். உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கும் வேலை இரு வீட்டிலும் பரபரப்பாக நடந்துவருகிறது.
சமீபத்தில் நடந்த ’சைவம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது நடிகர் பார்த்திபன், இயக்குனர் விஜய் - அமலா பால் காதலை போட்டு உடைத்தார்.
இதன் பிறகே இவர்களது காதல் வெளியுலகத்துக்கு தெரிய வந்தது. இனி மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்த இயக்குனர்-அமலாபால் தங்கள் காதலை ஒப்புக்கொண்டனர். தற்போது இந்த காதல் திருமணம் வரை சென்றிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் விஜய்-அமலா பால் திருமணம் கிறிஸ்துவ முறைப்படியும் இந்து முறைப்படியும் நடைப்பெற உள்ளதாம்.
இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் வருகிற ஜுன் 7ஆம் தேதி கேரளாவிலுள்ள பிரபலமான ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் நடைபெறவிருக்கிறது. அதைத்தொடர்ந்து திருமணம் இந்து முறைப்படி வருகிற ஜுன் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இவர்களது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் நடைபெறவிருப்பதால் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை முடித்துக் கொடுப்பதில் பிசியாக இருக்கிறார் அமலா பால். தற்போது அவர், மோகன்லாலுடன் ‘லைலா ஓ லைலா’, நிவின் பாலியுடன் ’மிலி’ ஆகிய மலையாள படங்களிலும், தமிழில் தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது...
Comments
Post a Comment