11th of May 2014
சென்னை::சூர்யா-ஜோதிகா நடித்த ‘பேரழகன்’ படத்தை இயக்கியவர் சசிசங்கர். இவர்
மலையாளத்தில் 15 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார். அதில் இரண்டு
படங்களுக்கு தேசிய விருது பெற்றிருக்கிறார். இவர் தமிழில் இயக்கியுள்ள
இரண்டாவது படம் ’பகடை பகடை’.
இந்த படத்தில் திலீப்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் குழந்தை
நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர். ”ஜெயம்”படத்தில்
வில்லனின் குழந்தை பருவ வேடத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக
திவ்யாசிங் நடிக்கிறார். ரிச்சு என்ற புதுமுகம் முக்கிய வேடத்தில்
நடிக்கிறார்.
இவர், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் திவ்யா சிங்கின் உடன் பிறந்த
தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. அக்காவும் தங்கையும் ஒரே படத்தில்
நடிக்கிறார்கள். மற்றும் கோவைசரளா, இளவரசு, மயில்சாமி, சந்தானபாரதி,
சிங்கமுத்து, சங்கர், கனகப்ரியா, முத்துக்காளை ஆகியோரும் நடிக்கிறார்கள்.
படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்ய ராம்ஜி இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறுகையில்…
பணம் எப்படியெல்லாம் ஒருவன்
வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதை காதல் மற்றும் அக்ஷன் கலந்து சொல்லி
இருக்கிறோம். பகடைக்காய் மாதிரி பணம் எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது
இதைதான் இதில் பதிவு செய்கிறோம். இந்த கதாப்பாத்திரத்திற்கு திலீப்குமார்
ஏகப் பொருத்தமாக இருந்ததால் அவரை ஒப்பந்தம் செய்தோம். பக்கா கமர்ஷியல்
படமாக “பகடை…..பகடை”உருவாகி உள்ளது.
http://poonththalir-kollywood.blogspot.com/2014/05/pagadai-pagadai-movie-stills.html#more
http://poonththalir-kollywood.blogspot.com/2014/05/pagadai-pagadai-movie-stills.html#more
Comments
Post a Comment