சாக்லேட் ஹீரோ என்ற இமேஜூடன் சிக்ஸ்பேக்கிற்கு ஆலோசனை வழங்குகிறார் ஜெயம்ரவி!!!

4th of May 2014
சென்னை::சாக்லேட் ஹீரோ என்ற இமேஜூடன் பல ஆண்டுகளாக கோலிவுட்டில் வளர்ந்து கொண்டிருந்த ஜெயம்ரவி, இடையிடையே ஆக்ஷன் கதைகளிலும் நடித்துக்கொண்டுதான் இருந்தார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் கிக் பாக்சராக நடித்தார். அதையடுத்து பேராண்மையிலும் ஆக்சன் ரோலில் நடித்த ஜெயம்ரவி, இப்போது பூலோகம் படத்திலும் வடசென்னை கிக் பாக்சராக நடித்துள்ளார்.

மேலும், முந்தைய படத்தை விட இந்த படத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.அதற்காக தனது பாடியை பக்கா கிக் பாக்சராக மாற்ற வேண்டும் என்பதற்காக, சில மாதங்களாக ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுத்து தனது உடல் எடையை குறைத்து கரடுமுரடான கெட்டபுக்கு மாறி நடித்திருக்கிறார். அப்படம் இந்த மாதம் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், தற்போது அவர் நடித்து வரும் ரோமியோ ஜூலியட் என்ற படத்தில் சிக்ஸ்பேக் எக்ஸ்பட்டாக நடித்துள்ளார். சினிமா ஹீரோக்கள் மட்டுமின்றி ஏராளமான இளைஞர்களுக்கு சிக்ஸ் பேக் வைப்பது எப்படி என்பது பற்றி ஆலோசனை கூறும் கேரக்டரில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி. அப்படி அவரிடம் சிக்ஸ்பேக் ஆலோசனை கேட்பதற்கு சில நிஜ சினிமா ஹீரோக்களே வருவது போன்றும் படமாக்குகிறார்களாம். அப்படி கெஸ்ட் ரோலில் வந்து செல்வதற்கு சில முன்னணி ஹீரோக்களிடம் அப்படத்தின் டைரக்டரான லஷ்மண் பேசிவருகிறாராம்....

Comments