சிவப்பு கம்பளத்தில் நடக்க விரும்பும் விசாகா!!!


14th of May 2014
சென்னை::இந்த வருடத்தில் அதிக படங்களில் நடித்து வருவது லட்சுமி மேனனோ, சமந்தாவோ இல்லை.. நம்ம ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ புகழ் விசாகா தான். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் சேர்த்து மொத்தம் ஆறு படங்களில் நடித்து வருகிறார் விசாகா.
 
அதில் ஒன்றுதான் மலையாளத்தில் அவர் முதன்முதலில் நடித்திருக்கும் ‘மோட்டார் சைக்கிள் டயரீஸ்’.
இந்தப்படத்தை இயக்குவது சூப்பர்ஹிட்டான ‘ட்ராஃபிக்’கை இயக்கிய ராஜேஸ் பிள்ளை. படத்தை தயாரிப்பவர் இன்னொரு சூப்பர்ஹிட்டான ‘ஆர்டினரி’யை இயக்கிய சுகீத்.
 
கூடவே படத்தின் திரைக்கதை அமைப்பில் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்து செயல்பட்டிருக்கிறார். அப்படியென்றால் படம் எப்படி இருக்கும் என சொல்லவா வேண்டும்.
இந்நிலையில் வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தப்படம் கலந்துகொள்ள இருக்கிறது. அதுமட்டுமல்ல தற்போது படத்தயாரிப்பில் இறங்கியிருக்கும் விசாகாவுக்கு கேன்ஸ் விழாவில் நடைபெறும் தயாரிப்பாளர்களுக்கான ஒர்க்ஷாப்பில் பங்கேற்க அழைப்பும் வந்திருக்கிறது.
 
இதுபற்றி விசாகாவிடம் கேட்டால், “கேன்ஸ் திரைப்பட விழாவில் நான் கலந்துகொள்வது இது நான்காவது முறை. இந்தமுறை ஒரு தயாரிப்பாளராக ஒர்க்ஷாப்பில் கலந்துகொள்வதில் கூடுதல் மகிழ்ச்சி.. கேன்ஸ் விழாவில் அளிக்கப்படும் சிவப்பு கம்பள வரவேற்பில் நடக்கவேண்டும் என்பது ஒவ்வொரு நடிகைக்குமான கனவு. அது எனக்கு நனவாகி இருக்கிறது” என்கிறார். ...

Comments