ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா!!!

31st of May 2014
சென்னை::ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் 'கத்தி'. இதற்கு அடுத்து சிம்புதேவனுடன் கைகோர்க்கப் போகிறார் விஜய்.
 
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். விஜய்யுடன் ஸ்ருதிநாசன் நடிப்பது இதுவே முதல் முறை.
 
மேலும், இப்படத்தில் ஸ்ரீதேவி , 'நான் ஈ' படத்தில் நடித்த சுதீப் ஆகியோர்  நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தில் நடிப்பதற்காக சுதீப்புக்கு ஆறு கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.
 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கலாம் என்ரு சொல்லப்பட்டு வந்தது. ஆனால், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனை அழைத்துவர பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அவரிட தேதிகள் இல்லாததால் இங்கே உள்ள நடிகைகளில் யாரை அணுகலாம் என யோசித்தவர்களுக்கு பளிச்சென ஹன்சிகா கண்ணுக்கு தெரிந்தார்.

ஏற்கனவே விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்திலும் ஜோடியாக நடித்திருந்தார் ஹன்சிகா. தற்போது அவர் நிறைய படங்களில் நடித்து வந்தாலும் அவர் கைவசம் இவர்கள் கேட்ட தேதிகள் இருந்ததால் விஜய்க்கு ஜோடியாக அவரையே ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
 

Comments