28th of May 2014
சென்னை::தற்போது ‘அட்டகத்தி’ ரஞ்சித் டைரக்ஷனில் கார்த்தி நடித்துவரும் ‘மெட்ராஸ்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அனேகமாக ஜூன் இறுதியில் படத்தை வெளியிடலாம் என ஒரு பேச்சு நிலவுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கையோடு தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கார்த்தி. படத்தின் பெயர் ‘கொம்பன்’. சசிகுமார் நடித்த ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தையா தான் இந்தப்படத்தை இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது.
ராமநாதபுரம் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க லட்சுமி மேனன் மற்றும் ஸ்ரீதிவ்யா உட்பட சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்தப்படத்தில் கதாநாயகி கேரக்டருக்கு லட்சுமி மேனன் தான் செட்டாவார் என இயக்குனர் உறுதியாக நம்புகிறார்.
அதற்கேற்ற மாதிரி தற்போது ஸ்ரீதிவ்யாவிடம் தேதிகள் இல்லை என்பதால் லட்சுமி மேனனுக்குத்தான் இந்த வாய்ப்பு செல்லும் என்றே தெரிகிறது.. படத்தில் பங்குபெறும் மற்ற டெக்னீசியன்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும். வரும் ஜூன் மாத இறுதியில் ‘கொம்பன்’ படப்பிடிப்பை துவங்க முடிவு செய்துள்ளார்களாம்.
Comments
Post a Comment