மகேந்திரன் - இளையராஜா படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்!!!

10th of May 2014
சென்னை::முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’, ‘மெட்டி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் மகேந்திரன். தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்த இவர், பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

இதற்கிடையில், மீண்டும் படம் இயக்கப் போவதாக அறிவித்த மகேந்திரன், இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கப் போவதாகவும் அறிவித்தார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், படத்தின் தொடக்க விழாவும் சென்னையில் நடைபெற்றது. இதில் இளையராஜா கலந்துகொண்டார். இப்படத்தை தயாரிக்கும் நபரையும் மகேந்திரன் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இதற்கிடையில், இப்படத்தின் தயாரிப்பாளர் விஷயத்தில் திடீர் மாற்றம் நடந்துள்ளது. மகேந்திரன் - இளையராஜா இணையும் இந்த படத்தை பிரகாஷ்ராஜ் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் "தான் தயாரிக்கும் அடுத்த படத்தை மகேந்திரன் இயக்கப்போவதாகவும், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இருவரும் இணையும் இந்த படத்தை நான் தயாரிப்பது பெருமையாக இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.....

Comments