மீண்டும் சிம்புவுடன் இணைந்தாரா ஹன்சிகா?!!!

1st of May 2014
சென்னை::சிம்பு,ஹன்சிகா அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் இனைந்து நடித்தனர். இந்தப் படங்களில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

ஆனால் அந்தக் காதல் இந்தப்படத்தில் நடித்து முடிப்பதற்குள் முட்டி மோதிக்கொண்டு காற்றில் அனலாக பறந்துவிட்டது. அதனால் இவ்விரு படங்களும் நீண்ட நாட்களாகவே கிடப்பில் போடப்பட்டன. சிம்புவின் மீது உள்ள கோபத்தால் ஹன்சிகா கால்ஷீட் தராமல் இழுத்தடிப்பதே படப்பிடிப்பின் தாமத்திற்கு காரணம் என்றெல்லாம் கூறப்பட்டது.

வாலு’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் ‘யூ ஆர் மை டார்லிங்…’  என்ற பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டும் பாக்கி இருந்தது. இப்போது அந்த பாடல் காட்சியும் இயக்குனரின் முயற்சியால் சமீபத்தில் படமாக்கப்பட்டது. காதல் முறிவுக்கு பின் சிம்பு-ஹன்சிகா இருவரும் மீண்டும் இணைந்து இந்த பாடல் காட்சியில் நடித்து கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் இருவரும் படத்தில் நடித்ததை பார்த்து யாரோ நிஜத்திலும் இணைந்து விட்டதாக கொழுத்தி போட்டுவிட்டனர். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவவே உடனே சுதாரித்துக்கொண்ட ஹன்சிகா தன் டுவிட்டர் பக்கத்தில் நான் யாரையும் காதலிக்கவில்லை. இது எல்லாம் வதந்தி என்று கூறியுள்ளார்..
 

Comments