11th of May 2014
சென்னை::Tags : Aivaraattam New Movie Photos, Aivaraattam Latest Movie Gallery, Aivaraattam Unseen Movie Pictures, Aivaraattam Film Latest images, Aivaraattam Movie Hot Stills, Aivaraattam Movie New Pics
சுபசெந்தில் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில்,
சி.கே.செந்தில்குமார் தயாரிக்கும் புதிய படத்திற்கு 'ஐவராட்டம்' என்று..
சுபசெந்தில் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில், சி.கே.செந்தில்குமார் தயாரிக்கும் புதிய படத்திற்கு 'ஐவராட்டம்' என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் நடிகர் ஜெயபிரகாஷின் மகன்கள் நிரஞ்சன் ஜெயபிரகாஷ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் அம்ருத் கலாம் என்பவரும் முக்கிய வேடமேற்கிறார்.
இவர்களுடன் முக்கிய வேடத்தில் ஜெயபிரகாஷ், சி.கே.செந்தில்குமார் இருவரும் நடிக்கிறார்கள்.
கதாநாயகியாக நித்யாஷெட்டி நடிக்கிறார். மற்றும் பசங்க சிவகுமார், லொள்ளுசபா மனோகர், கிங்காங்,மதயானைகூட்டம் காசி,ராஜபாண்டி, ஆலன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ரவீந்திரநாத்குரு ஓளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, சுவாமிநாதன் இசையமைக்கிறார். இவர் இசையமைப்பாளர் செல்வகணேஷின் மகன் ஆவார். மோகன்ராஜன் பாடல்கள் எழுத, நந்தா நடனம் அமைக்கிறார். படத்தொகுப்பை சூர்யா கவனிக்க, மயில்கிருஷ் கலைத்துறையை கவனிக்கிறார். சலீம் தயாரிப்பு மேற்பார்வையிடுகிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி மிதுன்மாணிக்கம் இயக்குகிறார். படம் குறித்து கூறிய மிதுன்மாணிக்கம், "சிவகங்கை மாவட்டத்தில் ஐந்து பேர் மட்டும் விளையாடும் கால்பந்தாட்டம் பற்றிய கதை இது.வேறு எந்த இடத்திலும் இந்த விளையாட்டை விளையாட அரங்கம் இல்லை. இதற்கான அரங்கு சிவகங்கையில் மட்டும் தான் இருக்கிறது.
அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்படும் பிரச்சனை, மற்றும் காதல் மற்றும் குடும்பசென்டிமென்டை உள்ளடக்கிய கதை இது. விளையாட்டை மையப்படுத்தி இப்போது நிறைய படங்கள் வருகிறது.
இது சினிமாவின் மூலம் இளைஞர்களை உற்சாகப் படுத்தி விளையாட்டை ஊக்குவிக்கும் முயற்சி இப்போது அதிகமாகி விட்டது.அந்த புதிய முயற்சியில் நாங்களும் இறங்கி இருக்கிறோம்.
படத்தின் படப்பிடிப்பு முழுவது சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்திருக்கிறது." என்றார்.

Comments
Post a Comment