8M M Movie Stills!!! மலேசியத் தமிழ் இயக்குனரின் ’8m m‘!!!

16th of May 2014
சென்னை::Tags : 8M M New Movie Photos, 8M M Latest Movie Gallery, 8M M Unseen Movie Pictures, 8M M Film Latest images, 8M M Movie Hot Stills, 8M M Movie New Pics.

இப்போதெல்லாம் புதுமையான கதையும் போரடிக்காத திரைக்கதையும் இருந்தால், முன்னணி நட்சத்திரங்கள் நடிக்காத படங்களும் ஓடுகின்றன, வரவேற்பைப் பெறுகின்றன. இந்த நம்பிக்கையில் உருவாகி..





இப்போதெல்லாம் புதுமையான கதையும் போரடிக்காத திரைக்கதையும் இருந்தால், முன்னணி நட்சத்திரங்கள் நடிக்காத படங்களும் ஓடுகின்றன, வரவேற்பைப் பெறுகின்றன.

இந்த நம்பிக்கையில் உருவாகிவரும் படம் ’8 ம் ம்’. மலேசியத் தமிழ் இயக்குனர் அமீன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் மலேசியாவில் மலாய், தமிழ் மொழிகளில் 12 படங்களை இயக்கியுள்ளவர்.

முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகி வரும் இப்படத்தில் நாயகனாக நிர்மல், நாயகியாக திவ்யா நடித்துள்ளனர். மலேசிய நடிகர்கள் சிவபாலன், காந்திநாதன் போன்றோர் தவிர பலரும் புதுமுகங்களே. மைண்ட் ஸ்க்ரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் படத்தை தயாரிப்பவர் ஜெயராதாகிருஷ்ணன்.

டம் பற்றி இயக்குநர் அமீன்,

இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர், ஒரு அட்வெஞ்சர் பிலிம் எனவும் சொல்லலாம். தமிழ்ச் சினிமாவின் வழக்கமான பல விஷயங்களை தகர்த்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு புது உத்தியில் திரைக்கதை அமைத்துள்ளோம்,” என்கிறார்.

படத்தின் கதை பற்றிக் கூறும் போது‘இது ஒரு பயணம் பற்றிய படம். வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் ஒரு காதல் ஜோடி, மலைப் பிரதேசம் நோக்கிச் செல்லும் பயணம்தான் கதை. அந்த பயணத்தில் காதல் ஜோடி சந்திக்கும் சம்பவங்கள், போய்ச் சேர்ந்ததும் நடக்கும் திருப்பங்கள்தான் படம்,” என்கிறார் அமீன்.

8எம்.எம்.’ என்பது என்ன என்ற போது “அதுதான் சஸ்பென்ஸ் என்கிறார். ‘8 எம்.எம்.’ என்பது பிஸ்டல் மாடலை குறிக்கும் ஒரு பெயர்.
இப்படம் சென்னை, ஏற்காடு என தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநில மலைப் பிரதேசங்களிலும் படமாகியுள்ளது. மலேசியாவிலும் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.
ரெட், ’5டி’, ஹெலி கேம் போன்ற கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ச க்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தில் 4 பாடல்கள். பாடல்களுக்கு இசை முரளி. இவர் ஏற்கெனவே சூர்யா நடித்த ‘ஸ்ரீ’ படத்துக்கு இசையமைத்தவர். பின்னணி இசை எல்.வி.கணேசன். இவர் அண்மையில் வந்த ‘ஆதியும் அந்தமும்’ மற்றும் ‘பனிவிழும் நிலவு’ படங்களின் இசையமைப்பாளர்.

படத்தின் முதல்பாதி ஒரு விதத்திலும் மறுபாதி இன்னொரு விதத்திலும் திரைக்கதை பயணிக்கும் புதிய உத்தியை இயக்குநர் அமீன் கையாண்டிருக்கிறார்.

ஒளி, ஒலி இரண்டிலும் நவீன தொழில் நுட்ப சாதனங்களைக் கொண்டு காட்சிகளை அழகுபடுத்தி இருக்கிறார்கள்.

ஹீரோயிசம் இல்லாமல் அசட்டுத்தனமான காட்சிகளோ மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளோ இல்லாமல் யதார்த்தமான போக்கில் உருவாகியிருக்கும் படம்.
படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிக் கட்ட தொழில் நுட்பப் பணிகள் நடந்து வருகின்றன.

ஜூனில் இசை வெளியீடு, ஜூலையில் திரைவெ ளியீடு என்கிற மும்முரத்தில் இயங்கி வருகிறது படக்குழு.

Comments