சண்முகப்பாண்டியன் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே படமாக்கியுள்ள யூனிட்: விஜயகாந்த் மகனுக்காக 6 மாதமாக கதாநாயகி தேடிய சகாப்தம் யூனிட்!
9th of May 2014சென்னை::விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்து வரும் படம் சகாப்தம். இந்த
படத்தின் படப்பிடிப்பு இதுவரை 12 நாட்கள் மட்டுமே நடந்துள்ளது. அதில்
சண்முகப்பாண்டியன் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே படமாக்கியுள்ளனர்.
முன்னதாக, கடந்த ஆறு மாதமாக அவருக்கு பொருத்தமான கதாநாயகி தேடும் படலத்தை
நடத்தியிருக்கிறார்கள்.
காரணம்,
சண்முகப்பாண்டியன் 6.4 உயரம். அதனால் கிட்டத்தட்ட 5.5 அடிக்கு மேலாவது
கதாநாயகி இருந்தால்தான் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால், பல
மாநிலங்களிலும் சகாப்தம் யூனிட் சல்லடை போட்டு கதாநாயகியை தேடி
வந்திருக்கிறார்கள். அப்படி எங்குமே சிக்காத கதாநாயகியை தற்போதுதான்
புனேயில் கண்டு பிடித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி,
படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒருவர் நகரம், இன்னொருவர் கிராமம்.
இரண்டுவிதமான கெட்டப்புகளுக்கும் நல்ல உயரமான நடிகையாக தேடியவர்களுக்கு
இப்போது வட மாநிலத்தில் இருந்தே 5.11 அடி உயரம் அந்த இரண்டு நடிகைகளும்
கிடைத்து விட்டதால் நாளை முதல் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு துரிதமாக
தொடங்குகிறது. அதேசமயம், ஒவ்வொரு படத்திலுமே இதேமாதிரி உயரம் கொண்ட
கதாநாயகி வேண்டுமென்றால் சண்முகப்பாண்டியனுக்கேற்ற கதாநாயகி தேடுவதிலேயே
பாதி நேரம் போய் விடும் என்கிறார்கள்...
Comments
Post a Comment