ஜூன்-6ல் ‘உன் சமையில் அறையில்’ ரிலீஸ்!!!

17th of May 2014
சென்னை::
படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இருக்கிறார் பிரகாஷ்ராஜ். பின்னே, தமிழில் ‘உன் சமையல் அறையில்’, தெலுங்கில் ‘உலவச்சாறு பிரியாணி’, கன்னடத்தில் ‘ஒகரானே’என ஒரே படத்தை மூன்று மொழிகளில் இயக்குவது என்றால் சும்மாவா.? அதை வெற்றிகரமாகவே சாதித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
 
மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘சால்ட் அண்ட் பெப்பர்’ படத்தைத்தான் ரீமேக் செய்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். நாற்பது வயதை தொடுகின்ற திருமணம் ஆகாத ஆண், செல்போன் மூலமாக, திருமணம் எனறாலே வெறுக்கும் ஒரு முதிர்கன்னியை பார்க்காமலே காதலிக்கிறான்.. பல குழப்பங்களுக்கு பின்னர் காதலர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் சொல்லும் கதைதான் இது.
 
மலையாளத்தில் லால் நடித்த கேரக்டரில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ். மேலும் சினேகா, ஊர்வசி இவர்களுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசைஞானி இளையரஜா இசையமைக்கிறார். இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். வரும் ஜூன்–6ஆம் தேதி இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்..

Comments