55வது படத்தின் படப்பிடிப்பு; ஈசிஆர் சாலையில் இருந்து மவுண்ட் ரோட்டுக்கு வந்த அஜீத்!!!

T30th of May 2014
சென்னை::அஜீத்தின் 55வது படத்தின் படப்பிடிப்பு முதல்கட்டமாக சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் நடந்தது. ரசிகர் கூட்டம் படையெடுக்கவே, பின்னர் செட் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால், செட் வேலைகள் முடிய சில மாதங்கள் ஆகும் என்பதால், அந்த கேப்பில் படப்பிடிப்பை தொடர நினைத்த அஜீத், கெளதம்மேனன் இருவரும் சில நாட்களாக இரவு நேரங்களில் அதே ஈசிஆர் சாலையில் படப்பிடிப்பு நடத்தி வந்தனர்.
 
ஆனால், நேற்று முன்தினம் சென்னையிலுள்ள மவுண்ட் ரோடு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள அப்பகுதியில் அஜீத் பைக் ஓட்டி வருவது போன்று முதலில் சில ஷாட்களை எடுத்த கெளதம்மேனன். பின்னர் அஜீத், வில்லன் சம்பந்தப்பட்ட சண்டை காட்சியில் சில முக்கிய ஷாட்களை படமாக்கினார்.
 
மேலும், அனுஷ்கா, சம்பந்தப்பட்ட சில காட்சிகளையும் அதே ஏரியாவில் படமாக்கியிருக்கிறார் கெளதம்மேனன். மக்கள் போக்குவரத்து மிகுதியான இடம் என்பதால், ரசிகர்களை படப்பிடிப்பு நடக்கும் எல்லைக்குள் நெருங்க விடாமல் இருக்க பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.

Comments