22nd of May 2014
சென்னை::கெளதம்மேனன் இயக்கும் தனது 55வது படத்தில் படு சீரியசாக
நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத். என்றாலும், அவ்வப்போது இயக்குனர்களிடம்
கதை கேட்கவும் நேரம் ஒதுக்கி வருகிறார். மங்காத்தாவிற்கு பிறகு தொடர்
வெற்றிகளை சந்தித்து வருபவர், அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக
இப்போது கதை விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
அதேபோல்
தன்னுடன் இணைந்து நடிக்கும் ஹீரோயின், வில்லன் போன்ற முக்கிய
நடிகர்களும் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்.
அதனால், மங்காத்தாவில் த்ரிஷா, ஆரம்பம் படத்தில் நயன்தாரா, வீரம் படத்தில்
தமன்னா என்று நடித்த அஜீத், இப்போது தனது 55வது படத்தில் அனுஷ்காவுடன்
இணைந்திருக்கிறார்.
இதையடுத்து மீண்டும் வீரம்
சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கும் அஜீத், அந்த படத்திற்கு நல்ல
பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய ஹீரோயினாக புக் பண்ண சொன்னாராம். அதையடுத்து,
இப்போது இந்தியில், தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி போன்ற அதிரடிப்படங்களில்
நடித்த வித்யாபாலனை, அஜீத்துடன் ஜோடி சேர்க்க பேசி வைத்துள்ளார் டைரக்டர்
சிவா.
ஆக, தமிழ் சினிமாவில் இருந்து ஏற்கனவே
சில படவாய்ப்புகள் சென்றபோது பாலிவுட்டில் பிசி என்று கைவிரித்த
வித்யாபாலன் இப்போது அஜீத் படம் என்றதும் கண்டிப்பாக கால்சீட் தருவதாக
டைரக்டர் சிவாவிடம் உறுதி அளித்துள்ளாராம்...
Comments
Post a Comment