19th of May 2014
சென்னை::தமிழில் இரண்டாம் உலகம் படத்தை முடித்து விட்டு ஆந்திராவுக்கு சென்ற அனுஷ்காவை, ராணி ருத்ரம்மாதேவி படத்துக்காக 6 மாதத்துக்கு ஒப்பந்தம் செய்தனர். அதையடுத்து பாகுபாலி படத்துக்காக ராஜமவுலியும் 6 மாதம் அக்ரிமென்ட் போட்டு தனது கஸ்டடிலிலேயே அனுஷ்காவை வைத்திருக்கிறார்.
இந்த நேரத்தில்தான் அஜீத்தின் 55வது பட வாய்ப்பும், ரஜினியின் லிங்கா படவாய்ப்பும் அனுஷ்காவை தேடிச்சென்றது. கடந்த 8 வருடங்களாக போராடி கிடைக்காத வாய்ப்பு இப்போது வாசல் கதவை வந்து தட்டுகிறபோது விட்டு விடுவாரா அனுஷ்கா? எப்படியோ ராஜமவுலியிடம் மன்றாடி இந்த இரண்டு படங்களிலுமே நடிக்க அட்வான்ஸ் வாங்கி விட்டார்.
ஆனால், மொத்த கால்சீட்டாக கொடுக்கவில்லை. ராஜமவுலி இடையிடையே கொடுக்கிற இரண்டொரு நாள் ஓய்வைதான் இந்த படங்களுக்கு பிச்சி பிச்சி கொடுத்திருக்கிறாராம். அதனால்தான், அஜீத் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனுஷ்கா, சில நாட்கள் நடந்து கொண்டிருக்கும்போதே, ராஜமவுலியிடமிருந்து போன் வந்ததையொட்டி, பாகுபாலிக்கு அழைக்கிறார்கள் என்று கெளதம்மேனனின் காது கடித்தாராம்.
விளைவு, ரசிகர்களின் டார்ச்சர் தாங்கவில்லை. அதனால், இனி அவுட்டோரில் வேண்டாம. இன்டோரிலேயே படப்பிடிப்பை நடத்தலாம் என்று அஜீத்திடம் சொன்ன கெளதம்மேனன், திடுதிப்பென்று அனுஷ்காவுக்காகவே படப்பிடிப்பை நிறுத்தியிருக்கிறார். ஆனால், இது அனுஷ்காவுக்காக நிறுத்தப்பட்டது என்ற விசயம் அஜீத்தின் காதுக்கு சென்றபோது கோபமாகி விட்டாராம்.
இதையடுத்து கெளதம்மேனனை தொடர்பு கொண்டவர், இது போகட்டும், இன்னொரு தடவையும் இதே மாதிரி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது அனுஷ்கா போகக்கூடாது. அது உங்க பொறுப்புதான் என்று தனக்கே உரிய கடுமையை நிதானமாக கூறினாராம்.
ஆக, இந்த சேதி லிங்கா படக்குழுவுக்கும் செல்ல, அவர்களும் அனுஷ்கா விசயத்தில் முன்கூட்டியே உஷாராகியிருக்கிறார்களாம்...

Comments
Post a Comment